30 வயதை தாண்டிய ஆண்மகனா நீங்கள் ?? – கட்டாயம் இந்த பதிவை படியுங்கள் !!!

Health Tips ஆரோக்கியம்

பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிப்பார்கள். அதே சமயம் பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கண்ட உணவுகளை உட்கொண்டதை காரணமாக கூறலாம். மேலும் ஆண்கள் குடும்பத்திற்காக நேரம் காலம் பார்க்காமல், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைப்பளுவால் அயராது உழைப்பார்கள்.

இப்படி அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைப்பளுவால், ஆண்கள் அதிகம் டென்சன் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு, விரைவில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்பட நேரிடுகிறது. அதில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் காரணமாக இதய நோய்களான மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றால் ஆண்கள் அதிகம் மரணத்தை சந்திக்கின்றனர்.

மேலும் ஆண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின், அதாவது திருமணத்திற்கு பின் உடல் பருமனடைந்துவிடுகிறார்கள். இப்படி உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் இருப்பதும், அவர்களுக்கு ஏற்படும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகும். இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஆண்கள் வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் 35 வயதிற்கு மேலான ஆண்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளுங்கள்.

சரியான உடல் எடையைப் பராமரிப்பது ஆண்கள் எப்போதும் தங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதிலும் வயது அதிகரிக்கும் போது, இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். பெரும்பாலும் 35 வயதிற்கு மேல் ஆண்களின் சுறுசுறுப்பு சற்று குறைந்திருக்கும்.

இந்த வயதில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள். எனவே 35 வயதிற்கு மேல் ஆண்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் எண்ணெய்களை அளவாகத் தான் சேர்க்க வேண்டும்.

அன்றாட உடற்பயிற்சி 35 வயதிற்கு மேல் பெரும்பாலான ஆண்கள் உடற்பயிற்சி செய்வதே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். சொல்லப்போனால் இந்த வயதில் தான் உடலில் கொழுப்புக்கள் அதிகமாக தேங்க ஆரம்பிக்கும். ஆகவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்யாமல் போனால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் தேங்கி, இதய நோய்க்கு வழிவகுத்துவிடும். எனவே இளம் வயதில் உடற்பயிற்சி செய்கிறீர்களோ இல்லையோ, 35 வயதிற்கு மேல் தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள்.

புகைப் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள் இன்றைய காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சொல்லப்போனால் 100 பேரில் 95 பேருக்கு கட்டாயம் இந்த பழக்கங்கள் இருக்கும்.

அதிலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் நுரையீரலுக்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் பெரும் தீங்கை உண்டாக்கிவிடும். இந்த பழக்கம் 35 வயதிற்கு மேலும் நீடித்தால் கட்டாயம் பக்கவாதம் அல்லது மாரடைப்பால் உயிரை இழக்க வேண்டியிருக்கும். அதிலும் ஒரு ஆண் 35 வயதிற்கு மேல் சிகரெட்டை அதிகம் பிடித்தால், புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

மதுவை குறையுங்கள் மது ஆண்களின் வயதான காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் 35 வயதிற்கு மேல் ஆண்கள் மதுவை அன்றாடம் அதிகம் பருகினால், அதனால் இதய நோயின் அபாயம் அதிகரிக்கும். அதோடு, கல்லீரல் பெரிதாக பாதிக்கப்பட்டு, அதன் செயல்பாடு முடக்கப்பட்டு, நாளடைவில் கல்லீரல் செயலிழந்து உயிரை இழக்க வேண்டியிருக்கும். அதோடு, ஒரு ஆணுக்கு மது பழக்கம் 35 வயதிற்கு மேல் அதிகமாக இருந்தால், அந்த ஆணுக்கு பாலியல் பிரச்சனைகளான விறைப்புத்தன்மை பிரச்சனை, சொந்த வாழ்வில் ஆர்வமின்றி போவது, மனநல பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மது குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

உணவில் உப்பைக் குறையுங்கள் ஆண்கள் 35 வயதிற்கு மேல் உண்ணும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அதனால் உடலில சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்து, இரத்த அழுத்த பிரச்சனையை சந்தித்து, இதய நோயால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். எனவே உண்ணும் உணவில் உப்பைக் குறைப்பதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்களை அன்றாடம் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களையும் தாக்கும். குறிப்பாக ஆண்களின் வயது அதிகரிக்கும் போது, எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, 40 வயதிற்கு மேல் இப்பிரச்சனையை ஆண்கள் சந்திப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக புரோபயோடிக்ஸ் நிறைந்த உணவுகள் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அதோடு செரிமான மண்டலத்திற்கும் உறுதுணையாக இருக்கும். ஆகவே புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிர் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் வயது அதிகரிக்கும் போது ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறையும். மேலும் ஆண்கள் வயதான காலத்தில் சோடா பானங்களை அடிக்கடி வாங்கி குடிப்பார்கள். ஆனால் சோடா பானங்களை ஆண்கள் குடித்தால் அது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்து, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கும் வழிவகுக்கும். ஆகவே தாகத்தைத் தணிப்பதற்கு தண்ணீரை அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்றவற்றை குடியுங்கள்.

பாலியல் ஆரோக்கியம் 35 வயதிற்கு மேல் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை அவர்களது பாலியல் வாழ்வில் தான். ஆண்களுக்கு பாலியல் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, அவர்கள் உட்கொள்ளும் உணவுகளும் ஓர் முக்கிய காரணமாகும்.

அதுவும் ஆரோக்கியமற்ற, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் தங்கி, உடல் முழுவதும் பாயும் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, அந்தரங்க உறுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் விறைப்புத்தன்மை குறைபாட்டை சந்திக்க நேரிடுகிறது.

எனவே இதைத் தவிர்க்க, ஆண்கள் 35 வயதிற்கு மேல் புரோட்டீன் நிறைந்த உணவுகளையும், நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். மேலும் பாலுணர்வு மற்றும் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும் உணவுகளான மாதுளை, முருங்கைக்காய், தர்பூசணி, நட்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.