35 வருடங்களுக்கு பின் தரையிறங்கிய விமானம் | நடந்தது என்ன?? நம்பவே மாட்டிங்க !! – வீடியோ இணைப்பு

செய்திகள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விமானபோக்குவரத்தானது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த விமான போக்குவரத்து கொண்டு வரப்பட்ட பின்னர் பொதுமக்களின் பயணங்கள் எளிதாக அமைந்தன.அதுமட்டுமல்லாமல் கூடவே பல விபத்துக்களும் ஏராளமான விமானங்கள் காணமல் போவதும் வாடிக்கையாக இருந்தது.இதுபோன்ற விமானம் காணாமல் போகும் நிகழ்வுகளை போல 1989இல் நடந்த ஒரு வினோதமான நிகழ்வை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

1989ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் போர்டோ அலேகரா எனும் விமான நிலையத்திற்கு 1950ஆம் ஆண்டுகளை சேர்ந்த ஒரு விமானமானது எந்த வித அறிவிப்புமில்லாமல் விமான கட்டுபாட்டு அரைக்கும் எந்தவித தகவலும் இல்லாமல் வந்து தரையிறங்கியது.

தரையிறங்கி வெகு நேரமாகியும் அந்த விமானத்தில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமுற்ற விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை சோதனையிட்டனர்.அதில் இருந்த காட்சி அனைவரையும் திகைப்பில்ஆழ்த்தியது.

அந்த விமானம் முழுவதும் இறந்த மனிதர்களின் பிணங்கள் இருந்ததால் விமான நிலையத்தின் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.விமானத்தை பற்றி ஆராய்ந்த பொது அந்த விமானமானது 1954ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனில் இருந்து கிளம்பியதாக எழுதப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பினை பார்த்து அதிகாரிகள் மேலும் குழப்பமடைந்தனர்.

இந்த நிகழ்வு சம்பந்தமாக இந்த துறையை சார்ந்த பல வல்லுனர்களும் ஆராய்ந்து பல விளக்கங்களை கொடுத்தனர்.ஆனால் எந்த ஒரு வல்லுனர்களின் பதிலும் இதற்கு ஏற்புடையதாக இல்லை.இந்த விமானத்தை பற்றி அறிய வந்த அரசு அதிகாரிகளும் இதற்காக எந்தவித சரியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சோதனையின் படி இந்த விமானமானது டைம் டிராப் (time trap) எனும் கால சுழலில் சிக்கியிருக்கலாம் எனவும் இந்த காரணத்தினால் தான் இந்த விமானம் 35 வருடங்கள் கழித்து தரையிறங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த செய்திகளுக்கு பின்னால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.அவை என்னவென்றால் எப்படி இந்த விமானமானது 35 வருடங்களாக குறைந்த எரிபொருளை வைத்து பறந்திருக்க முடியும்.யாருமே உயிரோடு இல்லை அப்படியென்றால் யாருமே இயக்காமல் எப்படி இந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியிருக்க முடியும்.

ஒருவேளை இந்த விமானம் காலப்பயணம் செய்து தற்போதைய காலத்திற்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.அனால் அப்படி வந்திருந்தாலும் இதிலுள்ள பயணிகள் எவ்வாறு இறந்திருக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்படுகிறது.இந்த விமானமானது சான்டியாகோ எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது.இந்த செய்தி உன்மைதானா அல்லது உண்மை போல் சித்தரிக்கப்பட்டதா என்பது இன்று வரை குழப்பமாகவே உள்ளது.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.