ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார்…பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி! வெளிவந்த உண்மை!

0
2202

பிரபல தமிழ் சேனல் ஒன்று ஆர்யாவை வைத்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்திவந்தது. இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யாவிற்கு யாரை பிடிக்கிறதோ அந்த பெண்ணையே ஆர்யா நிகழ்ச்சியின் இறுதியில் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதியாக அகாத, சுசானா, சீதாலட்சுமி போன்ற பெண்கள் இருந்தனர்.மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுவரும் நிலையில் ஆர்யா கடைசியில் ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் யாருக்கு அணிவிப்பார் என இறுதிவரை பரபரப்பாகவே இருந்தது.

பைனலுக்கு வந்திருந்தவர்கள் பலரும் ஆர்யா அகாதாவை திருமணம் செய்துகொள்வார் என கணித்தனர். ஆனால் ஆர்யா அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவை அறிவித்தார்.”என்னோட வாழ்க்கையை முடிவு செய்ய அறிவிக்கப்பட்ட இந்த ஷோவில், இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க.  என்று கூறினார்.

இந்நிலையில் ஆர்யா போட்டியாளர்களை மட்டுமில்லாமல் தன்னையும் ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் சிவகாமி சீரியல் நாயகியான மீனு கார்த்திகா.இது குறித்து இவர் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் சுசானாவை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்தேன்.

அவர் தான் எனக்கு பிடித்த போட்டியாளர் ஆனால் இறுதியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படி போட்டியாளர்களுடன் சேர்த்து என்னையும் ஏமாற்றி விட்டார் ஆர்யா என கூறியுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here