“தமிழ் போல் ஒரு மொழியை இதுவரை கண்டதில்லை” – ஜெர்மனி ஆய்வாளர்களை தெறிக்க விட்ட தமிழ் மொழி !!

0
500

சமீபத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் தென் இந்தியாவின் 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும், இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம் மற்றும் இந்தியாவில் டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சியை நடத்தியது.இதன் முடிவில், தெற்காசிய பகுதி மட்டும் சுமார்  600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது.

அதில் திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் என்பது போன்ற  6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த  ஆறு மொழிகளில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே என்று கூறப்பட்டுள்ளது. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளை மட்டும் ஏறத்தாழ 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர்.உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன.

உலகின் பழமையான மொழிகள் எல்லாம் பல  அழிந்தும், பல வழக்கொழிந்தும் போய்விட்ட நிலையில், எந்த நிலையிலும் தமிழில் எள்ளளவும் மாற்றம் ஏற்படாது அதே இலக்கண, இலக்கிய நயத்தோடு மிளிர்வது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here