சிம்பு என்ற புனைப்பெயர் கொண்ட சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் அல்லது அவரது இனிஷியல் எஸ்.டி. ஆர் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவார். அவர் தனது தந்தையின் இயக்கத்தில் மற்றும் அவரது தாயார் உஷா தயாரித்த காதல் அழிவதில்லை திரைப்படத்தில் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்திற்கு முன்பு, தனது தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நடிகராக நடித்ததன் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். சிலம்பரசன் தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய உறவை காத்த கிளி படத்தில் குழந்தையாக தோன்றினார்.
1995 ஆம் ஆண்டு முதல் தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி, எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, பெற்றெடுத்த பிள்ளை மற்றும் சபாஷ் பாபுலா, திருவல்லா உள்ளிட்ட தனது தந்தையின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு அடுத்து தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இவரின் பேரில் அதிக பல சர்ச்சை செய்திகளும் அதிக அளவில் இருந்து வந்தன. தற்போது 40 வயது ஆகும் சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அவருக்கு ஒரு கோடீஸ்வர பெண்ணை பேசி முடித்திருப்பதாக ஒரு தகவல் திரை உலகில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மருத்துவ படிப்பை முடித்தவர் எனவும் அவரது தந்தை ஒரு தொழில் அதிபர் எனவும் கூறப்படுகிறது. சிம்புவின் தந்தை விரைவில் இவரது திருமணத்தை முடிக்க வேண்டும் என்று ஏற்பாடுகளை செய்து வருகிறார். பல நாட்களாக சிம்புவின் திருமணத்திற்கு காத்திருந்த அவரின் ராசிகர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது.
