Sunday, April 2, 2023
HomeCinemaஇனி படங்களில் நடிக்கமாட்டாரா நயன்தாரா!! என்ன காரணம்!! வெளியான பகீர் தகவல்!!

இனி படங்களில் நடிக்கமாட்டாரா நயன்தாரா!! என்ன காரணம்!! வெளியான பகீர் தகவல்!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார். இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தனது இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு தயாரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி நயன்தாரா ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நயன்தாரா சினிமாவில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக ஒரு நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட. சமீபகாலமாக ஹீரோயினாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் தாலியை கழற்ற வேண்டாம் என நயன்தாராவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் தான் நடிக்கும் படங்களில் கூட ‘தாலி’யை கழற்றாமல் நடித்து வருகிறார். அதனால் படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் போதே ‘தாலி’யை கழற்றும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் தான் நயன்தாரா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மறுபுறம், நயன்தாரா தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments