#Breaking News படப்பிடிப்பின்போது குண்டுவெடிப்பு! சூப்பர்ஸ்டார் நடிகர் உயிர் தப்பினார்! புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

நடிகர் அக்சய் குமார் வட இந்திய மொழியின் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிரார்.அக்க்ஷய் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு பஞ்சாபியகுடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு அரசாங்கப் பணியாளர் ஆவார்.இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.இப்படி பல கடின உழைப்பிற்கு பிறகு சினிமா உலகில் கால் பதித்தவர்.

இந்நிலையில் நடிகர் அக்சய் குமார் நடித்து வரும் படப்பிடிப்பின் போது குண்டு வெடித்த  காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேசரி என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்தது.

படத்தின் கதாநாயகன் அக்சய்குமார் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் யுத்தக் காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்புக்கு பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது. அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேகமாகப் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் படக்குழுவினர் காயமின்றி தப்பியதாக தெரியவந்துள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.