அதிக காபி அருந்துபவர்களுக்கு தாதுஉப்புக்களின் குறைபாடு ஏற்படுகிறதாம்! – ஏன் தெரியுமா?

Health Tips ஆரோக்கியம்

சர்க்கரை, உப்பு, மைதா தவிர வேறு சில பொருட்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காலை எழுந்ததிலிருந்து காபி சாப்பிடுவது தொடங்குகிறது. குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமின்றி, இன்றைய வாழ்க்கை முறையில், விருந்து, விசேஷம், நண்பர், உறவினருடனான சந்திப்பு என்று பல நேரங்களில் காப்பி குறுக்கே வருகிறது.

காபியில் உள்ள காபின் மற்றும் பல வித அமிலங்கள் வயிற்றில், சிறுகுடல் சுவரில் அழற்சியை உண்டுபண்ணுகின்றன. ஐபிஎஸ், அல்சர், க்ரான்ஸ் நோய் ஆகிய பாதிப்புக்கள் உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது.வயிற்றிலிருந்து இரைப்பைக்கு சென்ற உணவு, மேலே திரும்ப வராமல், உணவுக் குழல் மூடப்பட்டிருக்கும். ஆனால் காபியிலுள்ள காபின் இந்தப் பகுதியைத் தளரச் செய்வதால் உணவு செரிமானம் ஆவதற்கு சுரக்கும் “ஹைட்ரோகுளோரிக் அமிலம்” மேல் நோக்கி வந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

இரைப்பையின் மெல்லிய சுவர்களை அரிக்கும். காபின் நீக்கப்பட்ட காபிகூட, நெஞ்செரிச்சலைத் தருவதால் காபின்தவிர காபியிலுள்ள வேறு பொருட்களும் நெஞ்செரிச்சலுக்குக் காரணம் ஆகலாம் என்கின்றனர். ஆகவே “காபின் நீக்கப்பட்ட காபியும் பாதுகாப்பானது அல்ல”.சிலர் காபியை மலமிளக்கியாகவே பயன்படுத்துகின்றனர். மலத்தைக் கீழ்நோக்கி அனுப்பும் செயலைச் செய்கிறது. சில சமயம் செரிமானம் முழுமையாவதற்கு முன்பே கூட இது நிகழ்கிறது.

செரிமானம் முழுமையாகாத நிலையில் சத்துக்கள் உறிஞ்சப்படுவது சிரமமாகிறது. அழற்சியும், நீர் தேங்குவதும் உணவுக்குழலில் நடக்கிறது.அதிக காபி அருந்துபவர்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவை உண்டாலும், தாதுஉப்புக்களின் குறைபாடு வரப் பெறுவர். காரணம் காபி, வயிற்றில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் கால்சியம், மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசியமான தாதுஉப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதிலிருந்து சிறுநீரகத்தைத் தடுக்கும் மெக்னீஷியம் குறைபாடு வந்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

காபிக் கொட்டையை அதிக உஷ்ணத்தில் வறுக்கும்பொழுது ‘அக்ரிலமைட்’ எனும் ரசாயனம் உண்டாகிறது. இது புற்று நோயை வரவழைக்கும். அதிகம் வறுக்க, வறுக்க அதிக அக்ரிலமைட் உண்டாகும்.அதிக காபியானது, மனஅழுத்தத்தைத் தரக்கூடிய கார்டிசால், எபிநெபிரின், நார் எபிநெபிரின் ஆகிய நொதிகளைச் சுரக்கச் செய்கிறது. இவை அதிக ரத்த அழுத்தம், அதிகமான இதயத்துடிப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.சாப்பாட்டுக்கு இடையே அருந்துவதால், செரிமானம் தடைபடும். ‘காபா’ என்று சொல்லப்படும் “காமா ப்யூடாரிக் ஆசிடு” என்னும் சமிக்ஞைகளை அனுப்பும் நியூட்ரான்களின் வளர்சிதை மாற்றத்தில் தடை உண்டாக்கும்.

இது இயல்பான நிலையில், மனநிலை, மன அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும் வேலையைச் செய்கிறது. உணவுப்பாதையை அமைதிப்படுத்துகிறது.
நமது மனம், செரிமானம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது வியப்புத்தரும். ஆனால் அதுவே உண்மை. அதிகம் காபி அருந்தினால் மனம், செரிமானம் இரண்டிலும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.


சிறிது நாட்களுக்கு முன் “உற்சாக பானமொன்றில் மனிதனுடைய பல்லைப் போட்டு வைத்தால் 2, 3 நாட்களில் பல் கரைந்து விடுகிறது” என்று செய்திகள் வந்தன. என்ன பயன்? இன்னும் விற்பனை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. வயதாகிப் பல் இல்லாமல் போவது இயற்கை. பல் இல்லாத இளைஞர்களை குழந்தைகளைப் பார்க்கப் போவது இனி இயற்கை ஆகிவிடும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.